Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேட்டரி கார்களின் சக்கரவர்த்தி இந்தியாவுக்கு பராக்.. பராக்..!

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் டெஸ்லா கார் இந்திய சந்தைக்கு வருகிறது. பேட்டரி கார்களின் சக்ரவர்த்தியாக டெஸ்லா திகழ்கிறது.

சுற்றுச் சூழல்காப்பில் ஆர்வமுள்ள பலரும் விரும்புவது டெஸ்லா கார்களைத்தான். பலரும் விரும்புவதற்குக் காரணமே அது பேட்டரியால் இயங்குவதுதான். இந்த நிறுவனத்தின் விலை குறைந்த கார்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கார்களை சார்ஜ் செய்வதற்கான மின்நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை டெஸ்லா ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியச் சந்தையில் இந்தக் கார்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெஸ்லா நிறுவனத்தின் ஆரம்ப நிலை கார்களின் விலை  சுமார் ரூ.23 லட்சம். இதன் விற்பனை அடுத்த ஆண்டு வரும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ