3 sensex | முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பால் சந்தைகள் அதிகரிப்பு!
Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பால் சந்தைகள் அதிகரிப்பு!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (04.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி நாளை ஏப்ரல் 5 ம் தேதி நடைபெறும் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக இன்றைய பங்குச்சந்தை அதிகரித்து காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததால் சந்தைகள் அதிகரித்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 130.01 புள்ளிகள் உயர்ந்து  25,399.65 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 45.75 புள்ளிகள் உயர்ந்து  7758.80 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 113.45 5.93%
டாடா பவர் 68.30 4.75%
எம் அண்ட் எம் 1,245.90 4.24%
பார்தி ஏர்டெல் 348.50 3.89%
ஆரோபிந்தோ பார்மா 753.95 3.29%

விலை குறைந்த பங்குகள்

அம்புஜா சிமென்ட்ஸ் 231.20 -1.76%
ஐடிசி 330.70 -1.59%
ஆக்சிஸ் வங்கி 444.75 -1.14%
மாருதி சுசூகி 3,683.25 -1.07%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,170.85 -1.03%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ