Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டவிரோதமாக முதலீடு: பட்டியலில் அமிதாப், ஐஸ்வர்யா ராய்!

வெளிநாடுகளில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்கள் பட்டியலை மொசாக் பன்சிகா என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் இடம்பெற்றுள்ளனர்.


எண்ணெய் நிறுவனங்களில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலை பனாமா சட்ட நிறுவனத்திடம் இருந்து பெற்று மொசாக் பன்சிகா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்களும் உள்ளனர். இவர்களில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய், டிஎல்எப் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்தின் கே.பி.சிங் மற்றும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், அப்போலோ டயர்ஸ், இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியர்கள் தவிர ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பாக்., முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ, பாகிஸ்தான் தற்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close