Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவின் டாப் பெஸ்ட் கல்லூரிகள் எவை?

இந்தியாவில் கல்வி எந்த நிலையில் இருந்தாலும் சரி, மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை மட்டும் வருடம் தவறாமல் வெளியிட்டு விடுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ‘இந்திய தரவரிசை 2016’ என்பதை விக்யான் பவனில் இன்று வெளியிட்டார்.

அந்த டாப் 10 கல்வி நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.

கல்வி நிறுவனங்கள் 4 பிரிவுகளில் பிரிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல், மேலாண்மை, மருந்தியல் மற்றும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் என்று பிரிக்கப்பட்டு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது.

டாப் 10 பொறியியல் கல்வி நிறுவனங்கள்:
ஐஐடி மெட்ராஸ்,
ஐஐடி பாம்பே,
ஐஐடி காரக்பூர்,
ஐஐடி டெல்லி,
ஐஐடி கான்பூர்,
ஐஐடி ரூர்கீ,
ஐஐடி ஹைதராபாத்,
ஐஐடி காந்திநகர்,
ஐஐடி ரோபர்-ரூப்நகர்,
ஐஐடி பாட்னா.

மேலாண்மை படிப்பு கல்வி நிறுவனங்கள் டாப் 10:
ஐஐஎம் பெங்களூரு,
ஐஐஎம் அகமதாபாத்,
ஐஐஎம் கொல்கத்தா,
ஐஐஎம் லக்னோ,
ஐஐஎம் உதய்பூர்,
ஐஐஎம் கோழிக்கோடு,
சர்வதேச மேலாண்மை நிறுவனம் புதுடெல்லி,
இந்திய வனமேலாண்மை கல்வி நிறுவனம், போபால்,
கான்பூர் மேலாண்மை கல்வி நிலையம்,
ஐஐஎம் இந்தூர்.

டாப் 10 பல்கலைக்கழகங்கள்:
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயன்ஸ், பெங்களூரு,
ரசாயன தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், மும்பை,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்,
ஹைதராபாத் பல்கலைக்கழகம்,
தேஜ்பூர் பல்கலைக்கழகம், அசாம்,
டெல்லி பல்கலைக்கழகம்,
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்,
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், திருவனந்தபுரம்,
பிட்ஸ், பிலானி;
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம்.

டாப் 10 பார்மசி (மருந்தியல்) பட்டப்படிப்பு கல்வி நிறுவனங்கள்:
மணிப்பால் பார்மசி கல்லூரி,
பார்மசூட்டிகள் அறிவியல் பல்கலைக்கழகம், சண்டிகர்,
ஜாமியா ஹம்தர்த், புதுடெல்லி,
பூனா மருந்தியல் கல்லூரி,
இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசி, நிர்மா பல்கலைக்கழகம் அகமதாபாத்,
பாம்பே மருந்தியல் கல்லூரி,
பிர்லா தொழில்நுட்ப கல்விக்கழகம், ராஞ்சி,
அமிர்தா மருந்தியல் கல்வி நிறுவனம், கொச்சி,
ஜே.எஸ்.எஸ். காலேஜ் ஆஃப் பாரம்சி, உதகமண்டலம்,
ஜே.எஸ்.எஸ். பார்மசி காலேஜ், மைசூரு.

எத்தனை கல்லூரிகள் உள்ளன, எவ்வளவு மாணவர்கள் படித்து முடித்து வெளியேறுகிறார்கள். அவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது. என்பதெல்லாம் கேள்விக்குறிதான்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close