Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ரெப்போ’ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு!

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் இன்று (05.04.16 ) நடந்தது. இதில் வட்டி விகிதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டத்தில் குறு­கிய கால கட­னுக்­கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. வங்­கிகள், ரிசர்வ் வங்­கி­யிடம் இருந்து பெறும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகிதம், 6.75 சத­விகித­மாக இருந்தது. இப்போது 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2015ல், ரெப்போ வட்டி, நான்கு முறை குறைக்­கப்­பட்டு, 8 சதவிகி­தத்தில் இருந்து, 6.75 சத­விகி­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. எனினும், கட­னுக்­கான வட்­டியை, 0.40 – 0.80 சத­விகிதம் வரை மட்­டுமே வங்­கிகள் குறைத்­தன. இந்த நிலையில் மேலும் 0.25 சதவிகிதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

வட்டி விகிதங்களை குறைக்கப்பட்டதால் வீடு, வாகன கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு ஏற்படும். முடங்கி கிடக்கும் தொழிற்துயை முடுக்கி விடும் வகையில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ