Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வட்டி விகிதம் குறைச்சாச்சு.. ஆனாலும் சென்செக்ஸ் சரிஞ்சிடுச்சு!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (05.04.2016 ) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 125 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. காலை நேர வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், ஆட்டோ, உலோகம், வங்கி, டெக் மற்றும் ஐ.டி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை குறைந்து காணப்பட்டது.

அதன்பின் மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் குறு­கிய கால கட­னுக்­கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ‘ரெப்போ’ வட்டி விகிதம், 6.75 சத­விகித­மாக இருந்தது. இப்போது 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சந்தை மந்தம் மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தில் பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய சந்தை இறக்கத்தில் நிறைவடைந்தது. ரிசர்வ் வங்கி வட்டி குறைத்துள்ளபோதிலும் சென்செக்ஸ் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 516.06 புள்ளிகள் குறைந்து 24,883.59 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 155.60  புள்ளிகள் குறைந்து 7603.20 என்ற நிலையில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


விலை அதிகரித்த பங்குகள்

ஹெச்சிஎல் டெக் 843.25 0.40%
பிபிசிஎல் 890.40 0.38%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 139.05 0.32%
லூபின் 1,463.70 0.17%


விலை குறைந்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 226.25 -6.72%
ஐசிஐசிஐ வங்கி 225.60 -5.51%
எஸ்பிஐ 184.35 -5.32%
பார்தி ஏர்டெல் 330.50 -5.16%
டாடா மோட்டார்ஸ் (டி) 271.25 -5.02%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close