Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பனாமா பேப்பர்ஸ் எதிரொலி ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா!

உலகம் முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. இதில் ஐஸ்லாந்து நாட்டின் பிரதமர் சிக்முந்தூர் குன்க்ளோஸன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வின்ட்ரின் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருப்பதாக பனாமா பேப்பர்ஸில் தகவல் வெளியானது.

இதனால் ஐஸ்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்பாக மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக குடியரசு தலைவரை சந்தித்த பிரதமர், நாடாளுமன்றத்தை கலைக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் மறுக்கவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கின்றன. இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close