Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆட்டோ, ஐடி பங்குகள் விற்பனையால் சரியும் சந்தை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (07.04.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

ஆசிய பங்குச்சந்தைகளில் பலவீனமான போக்கு மற்றும் முதலீட்டாளர்கள் நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோ, ஐடி மற்றும் வங்கி சார்ந்த பங்குகௐளை அதிகளவில் விற்பனை செய்து வருவதால் இன்றைய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 183.70 புள்ளிகள் குறைந்து  24,716.52 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 46.50 புள்ளிகள் குறைந்து  7567.40 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

டாடா பவர் 69.10 3.91%
அரவிந்தர் ஃபார்ம் 763.55 2.37%
லூபின் 1,514.30 1.97%
பி.எச்.இ.எல் 115.85 1.71%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,047.55 1.54%

விலை குறைந்த பங்குகள்

ஹெச்டிஎப்சி 1,067.85 -3.10%
மாருதி சுசூகி 3,465.05 -3.02%
டாடா மோட்டார்ஸ் (டி) 271.45 -1.86%
ஹிண்டால்கோ 87.45 -1.69%
ஐடிசி 320.75 -1.58%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ