Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவின் கோரிக்கை வங்கிகள் ஏற்க மறுப்பு!

எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல வங்கிகளில் விஜய் மல்லையா ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கியுள்ளார். இந்த கடனில் ரூ.4000 கோடியை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் திருப்பியளிக்க தொழிலதிபர் விஜய் மல்லையா கோரிக்கை விடுத்து இருந்தார். இதை வங்கிகள் ஏற்க மறுத்துவிட்டன.

விஜய் மல்லையா வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 7ம் தேதியான இன்று ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், மல்லையாவின் கோரிக்கையை தாங்கள் ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. இதனால் கடன் தொகையை திருப்பி செலுத்தும் விவகாரத்தில் மல்லையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ