Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் 2ஜி புகழ் நீரா ராடியா மற்றும் பிரபல தமிழக தொழிலதிபர்!

உலகை உலுக்கும் பனாமா பேப்பர்ஸ் ஊழல் பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன. தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் 2 ஜி வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நீரா ராடியா மற்றும் பிரபல தமிழக தொழிலதிபர் பெயர் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


எட்டு வருடங்களுக்கு முன்பு 2 ஜி வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் செய்ததாக நீரா ராடியா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர்கள் உள்பட இந்திய அரசியல்வாதிகளுடன் இவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் வெளியிடப்பட்டு சர்ச்சைக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது இவர் பெயர் பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் பட்டியலில் தமிழக தொழிலதிபர் சின்ன மருது சண்முக சுந்தரபாண்டியன் பெயர் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



 

பிரிட்டீஸ் விர்ஜின் தீவில் பான் ஏசிய ஸ்டார் நிறுவனத்துக்கு தமிழகத்தை சேர்ந்த சின்ன மருது சண்முக சுந்தரபாண்டியன் என்பவர் இயக்குநராக இருந்துள்ளார். இவர் பனாமா பேப்பர்ஸ் ஊழல் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.  நீரா ராடியா மட்டுமல்லாமல் பல முக்கிய தொழிதிபர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close