Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிதி நிலை முடிவால் சந்தை தடுமாற்றம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (08.04.16) காலை நேர வர்த்தகத்தில் மந்தநிலையில் வர்த்தகமாகி வருகிறது.

சர்வதேச பங்குச் சந்தைகளில் காணப்படும் ஏற்ற இறக்கம், நிறுவனங்களின் செயல்திறனை நிர்ணயிக்கும் நான்காம் காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் வெளியாகவிருப்பது ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பால் மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமையான நேற்று நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியடைந்து.

இந்த நிலையில் இன்று சர்வதேச சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் மந்தநிலையில் வர்த்தகமாகி வருகிறது. இதில் ஐடி, டெக்னாலாஜி, நுகர்வோர் சாதனங்கள், ஆயில், கேஸ், ஆட்டோ மற்றும் வங்கி துறை சார்ந்த பங்குகள் அதிக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 5.90 புள்ளிகள் உயர்ந்து  24,690.77 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 9.85 புள்ளிகள் உயர்ந்து  7555.80 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

லூபின் 1,538.55 1.91%
என்டிபிசி 128.95 1.90%
ஹிண்டால்கோ 88.90 1.83%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,190.00 1.67%
பி.எச்.இ.எல் 121.20 1.64%

விலை குறைந்த பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப் 2,907.55 -2.04%
இன்போசிஸ் 1,167.20 -1.21%
மாருதி சுசூகி 3,433.30 -1.09%
HUL 851.85 -0.95%
பார்தி Infratel 369.70 -0.86%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ