Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சக்தி வாய்ந்த பெண்மணி பட்டியலில் அம்பானியின் மனைவி முதலிடம்!

ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர் பட்டியலில் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.


வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆசியாவில் தொழிற்துறையில் சிறந்த 50 பெண்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 8 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் தலைவரான முகேஷ் அம்பானியின் மனைவி முதலிடம் பிடித்துள்ளார். ரிலையன்ஸ் தொழில் வணிகத்தில் நீதா அம்பானியின் எழுச்சி அசாத்தியமானது என ஃபோர்ப்ஸ் பாராட்டியுள்ளது.

இந்த பட்டியலில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 2வது இடத்தில் உள்ளார். இது தவிர அம்பிகா திராஜ், தீபாலி கோயாங்கே, வினிதா குப்தா, சந்தா கோச்சார், வந்தனா, லுத்ரா, கிரண் மசூம்தார் ஷா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ