Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பனாமா பேப்பர்ஸ் ஊழல்.. உண்மையை ஒப்புக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்!

என்னுடைய தந்தையின் வெளிநாட்டு பணத்தால் பயனடைந்தேன் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் ஒப்புக்கொண்டுள்ளார்.

உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலர் சட்டவிரோதமாக பனாமா நாட்டில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக "பனாமா பேப்பர்ஸ்" எனும் பெயரில் ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேம்ரூன் தந்தையும் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று குறிப்பிடப்பட்டது. இவ்விவகாரம் கேமரூனுக்கு பெரும் நெருக்கடியை எற்படுத்தியது.

இந்த நிலையில் பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து பேசிய டேவிட் கேமரூன், தனது தந்தையின் சட்டவிரோத வெளிநாட்டு பண முதலீட்டின் மூலம் எங்களுக்கு பலன் கிடைத்தது உண்மைதான். பஹாமாஸ் நாட்டின் ஒரு நிதி நிறுவனத்தில் எங்கள் குடும்பம் சுமார் 5 ஆயிரம் பங்குகளை வாங்கிவைத்திருந்தது. ஆனால், நாட்டின் பிரதமராக பதவியேற்கும் முன்பே, எனது பங்கான 30 ஆயிரம் பவுண்டுகள் கொண்ட பங்குகளை விற்றுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ