Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுளுக்கு கோரிக்கை!

இந்தியாவில் சர்வர்கள் அமைக்க வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் ஜி-மெயிலிடம் இந்தியாவில் சர்வர்கள் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிறுவனத்தின் சர்வர்கள் அனைத்தும் அமெரிக்காவில் உள்ளது. இந்த நிலையில் இது குறித்து இந்த நிறுவனங்களின் பிரநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தவறான, ஆத்திரமூட்டும் விதமாக தகவல்களை பரப்பும் கணக்குகளின் தகவல்களை பெறும் விதமாக இந்தியாவில் சர்வர் அமைக்க இந்த நிறுவனங்களிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ