Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டவிரோதமாக கணக்கு வைத்து இருப்பவர்கள் இரவில் தூங்க முடியாது!


சட்டவிரோதமாக கணக்கு வைத்து இருப்பவர்கள் இரவில் தூங்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  


உலகம் முழுவது முக்கிய பிரமுகர்கள் கணக்கில் வராத சொத்துக்களை மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டில் சட்ட விரோதமாக ரகசியமாக தொழில் முதலீடு செய்து இருப்பதாக 'பனாமா பேப்பர்ஸ்' எனும் பெயரில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உட்பட் 500 இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் இது குறித்து தனியார் டிவி சேனலுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில், "பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சட்டவிரோதமாக கணக்கு வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பனாமாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்கள் இப்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.

நாங்கள் கடந்த மூன்று நாட்களில் குழு ஒன்றை அமைத்து உள்ளோம். கணக்கு சட்டவிரோதமாக அல்லது சட்டப்படி தொடங்கப்பட்டதா என்பதை உறுதிசெய்ய நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சட்டப்படியாக கணக்குகளை பராமரிப்பவர்கள் கவலையடைய தேவையில்லை. ஆனால், சட்டவிரோதமாக கணக்கு வைத்திருப்பவர்கள் இரவில் தூங்க முடியாது” என்று கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ