Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அந்நிய முதலீடு அவுட்.. ஏற்ற இறக்கத்தில் சந்தை!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று (08.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன. சர்வதேச சந்தையில் மந்தம், நிறுவனங்களில் நிதி ஆண்டு முடிவு எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் பங்குகளை வாங்கி வருகின்றனர்.

எனினும் சந்தையை மீட்டு எடுத்து செல்வதற்கான எந்த ஒரு காரணியும் இல்லாதலால் பங்குச்சந்தை மந்த நிலையில் இருப்பதாக வல்லுஞர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் மேற்கொண்ட முதலீடுகளை கணிசமான அளவு எடுத்துச்  எடுத்து சென்றதால் சந்தை மந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 11.58ள் குறைந்து 24,673.84 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 8.75 புள்ளிகள் உயர்ந்து  7555.20 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

என்டிபிசி 131.55 3.95%
பி.எச்.இ.எல் 122.80 2.98%
டாடா பவர் 65.80 2.97%
டெக் மஹிந்திரா 455.85 2.56%
லூபின் 1,540.10 2.01%

விலை குறைந்த பங்குகள்

ஹீரோ மோட்டோகார்ப் 2,915.70 -1.76%
டிசிஎஸ் 2,432.05 -1.57%
இன்போசிஸ் 1,165.75 -1.33%
ஆக்சிஸ் வங்கி 421,60 -1.8%
மாருதி சுசூகி 3,430.65 -1.6%


 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ