Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகள் வாங்கலாம், விற்கலாம்!

பங்கு பரிந்துரை - 17 ஏப்ரல் 2016

சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர்,  குரோத் அவென்யூஸ் (Growth Avenues) மும்பை.

SEBI Registration (Research Analyst) INH000001964

நிஃப்டியின் கடந்த வார சார்டில் ஒரு ஹேங்கிங் மேன் பேட்டன் உருவாகி, தொடர்ந்து கரடியின் பிடியிலேயே வர்த்தகமாகி நிறைவடைந்தது. இது வரும் வாரத்திலும் நிஃப்டி இறக்கத்திலேயே வர்த்தகமாக வாய்ப்பிருப்பதையே காட்டுகிறது.

இந்த வாரத் தொடக்கத்திலும் கரடியின் பிடியில்தான் சந்தை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை உறுதிப்படுத்திக் கொண்ட உடனேயே  லாங் பொசிஷன்களை விற்று வெளியேறுவது நல்லது.

கடந்த வாரத்தில் இந்திய சந்தைகளை நேரடியாக பாதிக்கக்கூடிய ஆர்பிஐ கூட்டம் நடைபெற்றது. ஆர்பிஐ கூட்டத்தின் முடிவுகளை வங்கிகளும் பாண்டு சந்தைகளும்  பங்குச் சந்தை டிரேடர்களும், முதலீட்டாளர்களும் அதை வரவேற்ற்றாலும் அதனால் (ஆர்பி கூட்ட முடிவுகள்) விலை ஏற்றம் பெற்றதாக தெரியவில்லை.



 

ஆர்பிஐ கூட்டத்துக்கு முன்பே, ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்தால், பங்குச் சந்தைகளில் என்ன மாதிரியான விலை மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ அவை எல்லாம் ஆர்பிஐ கூட்டத்துக்கு முன்பே நடந்துவிட்டதால்தான் ஆர்பிஐ கூட்டத்துக்கு பிறகு பெரிய விலை மாற்றங்கள் இல்லாமல் வர்த்தகாமனது. எனவேதான் ஆர்பிஐ கூட்டம் சந்தை உயர்வதற்கு ஒரு வலுவான காரணமாக இல்லாமல் போனது. எனவே, இதுவரை எடுத்திருக்கும் லாங் பொசிஷன்களை விற்று வெளியேறுவது நல்லது என்பதையே சந்தை மீண்டும் அறிவுறுத்துகிறது.

அதோடு கடந்த வாரத்தில் பெரிய அளவில் முதலீட்டாளர்களும், டிரேடர்களும் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கின்றனர். தற்போதைக்கு லாங் பொஷின்களில் இருக்கும் பிரச்னைக்காக, லாங்கில் வர்த்தகம் மேற்கொள்ளாமல் ஷார்ட் எடுக்க இருப்பவர்களும் பார்த்து ஜாக்கிரதையாக வர்த்தகம் மேற்கொள்ளவும்.

இந்த வாரம் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாக வேண்டும் என்றால் கரடிக்கு வலு சேர்க்கும் விதத்தில் செய்திகள் வெளியாக வேண்டும். அப்போது நிஃப்டி தன் சமீபத்தைய உச்சத்திலிருந்து ஏறுவது குறைந்து கரெக்‌ஷன் ஆகத் தொடங்கலாம். இந்த இறக்கத்தில் நிஃப்டி சுமாராக 7400 என்கிற லெவல்கள் வரை குறைய வாய்ப்பிருக்கிறது.

நிஃப்டி கடந்த வாரத்தில் இறக்கத்தில் வர்த்தகமானாலும், வங்கி நிஃப்டி கடந்த வாரத்தில் அதிகம் இறக்கத்தை சந்திக்கவில்லை. எப்போதெல்லாம் வங்கி நிஃப்டியும், நிஃப்டியும் ஒரே போக்கில் வர்த்தகமாகவில்லையோ, அப்போதெல்லாம் ஒட்டுமொத்த சந்தையும் பக்கவாட்டிலேயே வர்த்தகமாகும்.

புதிதாக எதாவது ஒரு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ வந்தால்தான் சந்தையின் போக்கு, தற்போதைய டிரெண்டிலிருந்து முழுமையாக மாறி வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.  அடுத்த வாரம் சுவிங் டிரேடர்களைவிட, டே டிரேடர்களின் வர்த்தகங்களில்தான் இருக்கிறது சந்தை.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

தற்போதைய விலை: ரூ.1,036.35

பல வருடங்களாக இந்த நிறுவன பங்குகள் பக்கவாட்டிலேயே வர்த்தகமாகி வருகின்றன. தற்போதும் அதே போல்தான் வர்த்தகமாகி வருகின்றன. கூடிய விரைவில் இந்த நிறுவன பங்குகளின் விலை பிரேக் அவுட் ஆகி விலை அதிகரித்து, வர்த்தகமாக வாய்ப்பிருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.



இந்த நிறுவன பங்குகள் பக்கவாட்டிலேயே வர்த்தகமாகி வந்துகொண்டிருந்த காலங்களில், வால்யூம்கள் குறைந்துவிட்டது. இருப்பினும் இந்த நிறுவன பங்குகள் ரூ.1,050 என்கிற விலையில் நிலைத்து வர்த்தகமானால், ரூ.1,090 என்கிற விலைய இலக்காக கொண்டு பங்குகளை வங்கலாம். ரூ.1,020 என்கிற விலையை ஸ்டாப் லாஸாக வைத்துக் கொள்ளலாம்.

அல்ட்ராடெக்

தற்போதைய விலை: ரூ. 3,158.85:

இந்த நிறுவனத்தின் வாராந்திர சார்ட்கள் ஒரு நல்ல காளை பேட்டனை காட்டுகிறது. குறிப்பாக, இந்த நிறுவன பங்கில் என்ன விஷேசம் என்றால், இந்த் காளை பேட்டன்கள் எல்லாம் விலை அதிகரிக்கும் தருணத்தில் இந்த பேட்டன்கள் உருவாகி இருப்பது குரிப்பிடத்தக்கது. இந்த பேட்டன்களின்படி தெளிவாக வர்த்தகமானால், நிச்சயம் விலை ஏறும்.



 

கடந்த சில வாரங்களாக பெரும்பாலான சிமென்ட் நிறுவனப் பங்குகள் டிரேடர்களால் பெரிய அளவில் வர்த்தகமாகி வந்தன. எனவே, கூடிய விரைவில் ஒரு பிரேக் அவுட் ஆகி பங்குகளின் விலை ரூ.3,200-க்கு கூடுதலாக உயர்ந்து வர்த்தகமாகும். அதோடு இந்த காளை பேட்டன்கள் பெரிய இலக்கை வைத்து வர்த்தகம் செய்யலாம் என்று சொல்கிறது. எனவே, சுமாராக 300 ரூபாய் வரை அதிகரித்து வர்த்தகமாகலாம்

திருமலை கெமிக்கல்ஸ்

தற்போதைய விலை ரூ.217

பிரத்யேகமாக ரசாயனங்களை தயாரிக்கும் கெமிக்கல் நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் தனி டிமான்ட் இருக்கத்தான் செய்கிறது. கடந்த வாரத்தில் இது போன்ற நிறுவனங்களின் சார்ட்களில் நல்ல பேட்டன்கள் உருவாகி இருக்கின்றன.  அதில் திருமலை கெமிக்கல் நிறுவனத்தின் பங்கு இன்வர்டெட் ஹெட் அண்ட் சோல்டர்ஸ் பேட்டனைக் காட்டுகிறது.

அதோடு கடந்த வாரத்திலேயே அந்த பேட்டனின் விளைவாக பிரேக்அவுட் ஆகி விலை மற்றும் வால்யூம்கள்  அதிகரித்து வர்த்தகமாகி இருக்கிறது. எனவே, இதன் பங்குகளின் விலை வரும் வாரத்தில் மேலும் அதிகரிக்க இந்த செய்தியே போதுமானது. இந்த மொமென்டத்தில் திருமலை நிறுவன பங்குகள் 240 - 245 ரூபாய் வரி அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஐந்த நிறுவனப் பங்கை குறுகிய காலத்துக்கு வாங்கலாம்.

தொகுப்பு: மு.சா.கெளதமன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ