Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசிய சந்தையால் இந்திய சந்தை இறக்கம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (11.04.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேரத்தில் ஆசிய பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தன. அதுமட்டும் இல்லாமல் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட புளூசிப் நிறுவனங்களின் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி வருவதால் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தன. இந்த நிலையில் ஆசிய சந்தைகளின் தாக்கம் காரணமாக தற்போது இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 20.24 புள்ளிகள் குறைந்து  24,655.26 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.50 புள்ளிகள் குறைந்து  7550.70 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 348.00 4.00%
ஐடியா செல்லுலார் 111.00 1.79%
ஹிண்டால்கோ 89.25 1.77%
அதானி போர்ட்ஸ் 222.90 1.66%
டாடா மோட்டார்ஸ் 376.65 1.40%

விலை குறைந்த பங்குகள்

லூபின் 1,506.25 -2.20%
ஹெச்டிஎப்சி 1,064.25 -1.42%
சிப்லா 497.40 -1.40%
எம் அண்ட் எம் 1,215.80 -1.33%
டாக்டர் ரெட்டிஸ் 2,999.05 -1.32%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ