Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவிடம் பேசி நஷ்டத்தை குறைக்க வேண்டும்! வங்கிகளுக்கு அசோசேம் அறிவுரை

விஜய் மல்லையாவிடம் பேசி தங்களது நஷ்டத்தை வங்கிகள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அசோசேம் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. செப்டம்பருக்குள் 4,000 கோடி ரூபாய் செலுத்த மல்லையா முன்வந்ததை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு நிராகரித்தது.

இந்த சூழ்நிலையில், கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் விஜய் மல்லையாவுக்கு உள்ளது. வங்கிகள் திறந்த மனதுடன் விஜய் மல்லையா விடம் பேசி தங்களது நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் அறிவுறுத்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ