Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண் இயக்குநர் விவகாரம்: பொதுத்துறை நிறுவனங்களும் விதிமுறையை பின்பற்ற வேண்டும்! செபி வலியுறுத்தல்

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் செபி கேட்டுக்கொண்டிருக்கிறது.

செபியின் விதிமுறைகள்படி பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் இருக்க வேண்டும். அதேபோல நிறுவனத் தின் பங்குகளில் 25 சதவிகிதம் பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும்.

ஆனால் பெண் இயக்குநர் விவகாரத்தில் கொடுத்த காலக்கெடு எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது அபராதம் செலுத்த வேண்டும். தனியார் நிறுவனங்களாக இருந்தாலும், பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும் செபியின் பார் வையில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றுதான் என்று செபி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ