Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவமழை எதிர்பார்ப்பு.. சென்செக்ஸ் சீற்றம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (11.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தக்த்தில் ஆசிய பங்குச்சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்தபோதிலும், இந்திய பங்குச்சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வந்தன. அதுமட்டும் இல்லாமல் முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட புளூசிப் நிறுவனங்களின் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி வந்ததால் சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தன.  உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், சுகாதாரம், ஆட்டோ மற்றும் வங்கி போன்ற முன்னணி நிறுவன பங்குகள் காலை நேர வர்த்தகத்தில் விலை அதிகரித்து காணப்பட்டது.


இந்த நிலையில் இந்தியாவில் பருவமழை நன்றாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதால், முதலீட்டாளார்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தனர். முதலீட்டாளர்கள் ஆயில் அண்ட் கேஸ், ரியால்டி, கேப்பிடல் குட்ஸ், வங்கிகள், ஐடி மற்றும் ஆட்டோ சார்ந்த பங்குகள் வாங்கி குவித்தனர். இதனால் இது சார்ந்த பங்குகள் 1 முதல் 2.2 சதவிகிதம் வரை அதிகரித்து காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 348.32 புள்ளிகள் உயர்ந்து  25,022.16 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 116.20 புள்ளிகள் உயர்ந்து  7671.40 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 115.20 5.64%
போஷ் 19,984.30 5.22%
ஹிண்டால்கோ 92.20 5.13%
அதானி போர்ட்ஸ் 229.05 4.47%
பேங்க் ஆப் பரோடா 149.35 4.37%

விலை குறைந்த பங்குகள்

லூபின் 1,518.75 -1.39%
அம்புஜா சிமென்ட்ஸ் 224.55 -0.53%
சிப்லா 502.15 -0.46%
டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் 3,029.25 -0.33%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,152.20 -0.21%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ