Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருவமழை, ஐஐபி எதிர்பார்ப்பால் சந்தை அதிகரிப்பு!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (12.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இந்தியாவில் வரும் மாதங்களில் பருவமழை சிறப்பாக பெய்யும் என்று குறிப்பிடப்பட்டதால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. இதில் விவசாயம் சார்ந்த பங்குகளின் விலை அதிகபட்சமாக ஏற்றத்தில் நிறைவடைந்தது. அதுமட்டும் இல்லாமல் ஐஐபி டேட்டா மற்றும் பணவீக்கம் குறித்த டேட்டா வெளியாக இருப்பதையொட்டி முதலீட்டாளர்கள் ஆர்வமாக பங்குகளை வாங்கியதால் சந்தை ஏற்றத்தில் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 123.43 புள்ளிகள் உயர்ந்து  25,145.59 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 37.55 புள்ளிகள் உயர்ந்து  7,708.95 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

கெயில் 366.35 4.09%
ஜீ மகிழ்விக்க 405.70 2.80%
மாருதி சுசூகி 3,573.70 2.73%
ஹீரோ மோட்டோகார்ப் 3,051.45 2.52%
டாடா மோட்டார்ஸ் (டி) 294.15 2.47%

விலை குறைந்த பங்குகள்

கோல் இந்தியா 274.40 -2.16%
டாடா ஸ்டீல் 324.50 -2.01%
ஐடியா செல்லுலார் 113.05 -1.87%
ஐடிசி 322.40 -1.48%
டெக் மஹிந்திரா 464.45 -1.10%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close