Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருவமழையால் சந்தை தொடர் பாய்ச்சல்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (13.04.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்திருந்த பருவ மழை, நடப்பு ஆண்டில் இயல்பான நிலைக்குத் திரும்பும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மற்றும், நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவுகள், அதிலும் குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் சிறப்பான அளவில் இருக்கும் என்ற முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினமும் பருவமழை அறிவிப்பின் எதொரொலியாக சந்தை தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 398.44 புள்ளிகள் உயர்ந்து  25,544.33 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 120.85 புள்ளிகள் உயர்ந்து  7829.80 என்ற நிலையில் வர்த்தகமானது 

விலை அதிகரித்த பங்குகள்

எம் அண்ட் எம் 1,303.15 5.10%
ஐசிஐசிஐ வங்கி 238.60 4.31%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,294.95 4.06%
பார்தி இன்ப்ராடெல் 399.35 3.79%
பார்தி ஏர்டெல் 362.25 3.47%

விலை குறைந்த பங்குகள்

எதுவும் இல்லை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close