Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் சரவெடி..! 480 புள்ளிகள் அதிகரித்தது இப்படிதான்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (13.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

நடப்பு ஆண்டில் பருவமழை இயல்பான நிலைக்குத் திரும்பும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு, நான்காம் காலாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பான அளவில் இருக்கும் என்ற முதலீட்டாளர்களிடையே எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்தது. இதுமட்டும் இல்லாமல் இன்றைய வர்த்தகத்தின்போது சர்வதேச சந்தை ஏற்றத்தில் வர்த்தகம், சில்லறை பணவீக்கம் கடந்த 6 மாதத்தில் இல்லாத அளவில் சரிவடைந்தது போன்ற காரணங்களால் சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 481.16 புள்ளிகள் உயர்ந்து  25,626.75 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 141.50 புள்ளிகள் உயர்ந்து  7850.45 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

எம் அண்ட் எம் 1,332.45 7.46%
ஐசிஐசிஐ வங்கி 240.65 5.20%
பி.எச்.இ.எல் 133.65 4.99%
பஜாஜ் ஆட்டோ 2,582.50 4.99%
ஹிண்டால்கோ 96.30 4.67%

விலை குறைந்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 401.90 -0.94%
இன்போசிஸ் 1,172.70 -0.80%
ஹெச்சிஎல் டெக் 837.55 -0.25%
அதானி போர்ட்ஸ் 233.55 -0.02%

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு வியாழக்கிழமையும் (ஏப். 15), ராம நவமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (ஏப். 16) விடுமுறை என பங்குச்சந்தையின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ௐளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வழக்கமான வார விடுமுறை தினங்கள் என்பதால் நான்கு தினங்கள் தொடர் விடுமுறைக்குப் பின் 18-ம் தேதி (திங்கட்கிழமை) பங்கு வர்த்தகம் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ