Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பைக் வாங்கலையோ.. பைக்.. ஃபிளிப்கார்ட்டின் அட்டகாச விற்பனை!

இந்தியா முழுவதும் உள்ள தனது வாடிக்கையாள்களுக்கு இனி பிளிப்கார்ட் இரு சக்கர வாகனங்களை விற்கும் சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

நம் நாட்டின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் ஆன்லைனில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருவது அனைவருககும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்களைத் தனது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விற்பனையை பெங்களூரில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் வருகிற மே மாதம் முதல் தனது வாடிக்கையாள்களுக்கு இனி பிளிப்கார்ட் இரு சக்கர வாகனங்களை இந்தியா முழுவதும் விற்கும் சேவையை துவங்குகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ