Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி


ஏலக்காய் (Cardamom)

கடந்த வாரத்தில் முக்கியச் சந்தைகளில் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது. கேராளாவில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. இதனால் வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமானது.

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வறட்சி வானிலை காரணமாக ஏலக்காய் விளைச்சல் குறைந்து வரத்தும் குறையும். மேலும் ஏலக்காய்க்கான தேவை அதிகரிக்கும் காலகட்டம் இது என்பதால் வரும் வாரத்தில் விலை உயர்ந்து வர்த்தகமாகும் வாய்ப்பு அதிகம்.

மஞ்சள் (Turmeric)

மஞ்சள் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. முக்கியச் சந்தைகளில் மஞ்சளின் வரத்து அதிகரித்திருந்ததால் இறக்கத்தில் வர்த்தகமானது. ஆனால் வரத்து வந்த மஞ்சள் தரமாக இருந்ததால் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால் மஞ்சள் விலை உயர்ந்தும் வர்த்தகமானது.

சந்தைக்குப் புதிய மஞ்சள் வருகை தந்திருந்தாலும், தேவை இல்லாததால் சந்தையில் மஞ்சளுக்கான வர்த்தகம் நெகட்டிவான சென்டிமென்டில்தான் இருக்கிறது. ஏற்றுமதி ஆர்டர்களும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை. ஆனாலும், வரும் பருவத்தில் மழைக் குறைவு காரணமாக மஞ்சள் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்பதால் வரத்து குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் வாரத்தில் மஞ்சள் விலை குறைந்து வர்த்தகமாகும் என்றாலும், விலைக் குறைவு கட்டுக்குள் இருக்கும்.

ஜீரகம் (Jeera)

ஜீரகம் முக்கியச் சந்தைகளில் சற்று ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் ஜீரக வரத்தும் அதற்கான தேவையும் மாறி மாறி இருப்பதுதான் காரணம்.

ஆனால் சந்தையில் தரமான ஜீரகம் இருப்பதால் வரும் வாரங்களில் ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உள்நாட்டிலும் ஜீரகத்துக்கான தேவை இருக்கும்பட்சத்தில் விலை உயர்ந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளது. ஆனால் ஜீரகம் வரத்து அதிகரிக்கும் எதிர்பார்ப்பு இருப்பதால் விலை உயர்வும் கட்டுக்குள் இருக்கும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ