Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையா பாஸ்போர்ட் முடக்கம்!

9 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தாத விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை  முடக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் உள்ள  ஐடிபிஐ வங்கியில்,  ரூ.900 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் மல்லையாவை விசாரிக்க,  அவருக்கு 3 முறை வாய்ப்புகள் வழங்கியது. ஆனால் மல்லையா,  கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் ஆஜராக இயலாது என்று காரணம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அமலாக்கத் துறையினர், விஜய் மல்லையா விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே அவரது பாஸ்போர்ட்டை முடக்கி உத்தரவிட வேண்டும் என்று கடந்த 13-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ