Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்" பெயரை மாற்ற ஒப்புதல்!

என்எல்சி என்று அறியப்படும் "நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்" பெயரை மாற்ற அதன் பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறப்புத் தீர்மானம் மேற்கொண்டு அஞ்சல் வழி வாக்கெடுப்பின் மூலம் பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெற்று நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்துக்கு என்எல்சி நிறுவனத்தின் பங்குதாரர்கள் தங்களது ஒப்புதலை அளித்துள்ளதாக, மும்பை பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பொதுத் துறையைச் சேர்ந்த என்எல்சி நிறுவனம் நெய்வேலி மட்டுமின்றி, நாடு தழுவிய அளவில் சுரங்கங்களை கையகப்படுத்தி மின் உற்பத்தியில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்ற பெயர் என்எல்சி இந்தியா லிமிடெட் என்று மாற்றப்பட உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close