Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை! கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துவந்த தற்போதுதான் மீண்டும் ஏற்றமடையத் தொடங்கியது. இந்த நிலையில் மீண்டும் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெயின் பழைய வர்த்தக விலையைக் கொண்டு வருவதற்காக, அதன் உற்பத்தியைக் குறைக்க திட்டமிடப்பட்டது. இது குறித்த கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. இதில் பெட்ரோல் உற்பத்தி செய்யும் 18 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், இது குறிதது நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 30 டாலர்களுக்கும் கீழாக சரிந்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்தன.

இதை நடைமுறைப்படுத்துவதுவதற்காக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளின் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் ஞாயிற்றுகிழமை கூடி ஆலோசனை நடத்தினர். இதற்காக, சவுதி அரேபியா நாட்டின் பெட்ரோலியத்துறை மந்திரி அலி அல் நைமி, நைஜீரியா, வெனிசுலா, ரஷியா உள்ளிட்ட பல நாடுகளின் பெட்ரோலியத்துறை அமைச்சர்கள் தோஹா நகருக்கு வந்தனர்.

கத்தார் நாட்டின் எரிபொருள் மற்றும் தொழில்துறை மந்திரியின் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரான், அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு ஆதரவு தர முடியாது என்று ஈரான் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்நிலையில், நேற்று தோஹாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதனால் தற்போதைய சூழ்நிலையில், பெட்ரோல் உற்பத்தியை நிறுத்தி வைப்பது தொடர்பான புதிய செயல் திட்டத்தை வகுக்க நாளாகலாம் என்பதாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தற்போது ஏறுமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாலும் இப்போதைக்கு இந்தக் கூட்டத்தில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகள் பெட்ரோலிய உற்பத்தியை நிறுத்தாமல் பிற நாடுகள் மட்டும் உற்பத்தியை நிறுத்தி வைப்பதால் சர்வதேச சந்தை விலையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் வரும் நாட்களில் விலை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ