Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிசிஎஸ் நிகர லாபம் 72 சதவிகிதம் அதிகரிப்பு!

நம் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தின் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 72.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,413 கோடியாக அதிகரித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் சென்ற நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில் ரூ.28,449 கோடி வருவாய் ஈட்டியது. 2014-15-ஆம் நிதி ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ.24,220 கோடியுடன் ஒப்பிடும்போது இது 17.5 சதவிகித வளர்ச்சியாகும். நிகர லாபம் ரூ.3,713 கோடியிலிருந்து 72.7 சதவிகிதம் உயர்ந்து ரூ.6,413 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்ற 2015-16 ஆம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் வருவாய் 14.8 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,08,646 கோடியாக இருந்தது. நிகர லாபம் 22.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டு ரூ.24,292 கோடியாக இருந்ததாக இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ