Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருத்துக் கணிப்பில் கலக்கல்.. சென்செக்ஸ் 35,000 புள்ளிகள் வரை உயருமாம்!

நடப்பு  ஆண்டு இறுதிக்குள் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 29,000 முதல் 35,000 புள்ளிகள் என்கிற அளவு வரை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவை விடவும் தீவிரமாக இருக்கும் என்பதால், சர்வதேச முதலீட்டாளர்கள் வளரும் சந்தை நோக்கி திரும்புவார்கள். இவர்கள் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு காரணமாக இந்திய சந்தைகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முன்னணி பண்ட் மேலாளர்கள், சந்தை ஆய்வு நிறுவன தலைவர்கள், பங்குச் சந்தை தரகர்கள் என 35 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கருத்துக் கணிப்பில் டிசம்பர் மாத இறுதிக்குள் சந்தை 13 சதவிகிதம் வரை உயரும் வாய்ப்புள்ளது என்றும், சென்செக்ஸ் 29,000 முதல் 35,000 புள்ளிகள் என்கிற அளவு வரை உயர்வதற்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ