Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கடையடைப்பு, போராட்டம் எதிரொலி தங்கம் இறக்குமதி 80% சரிவு!

நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் காரணமாக தங்கம் இறக்குமதி கடுமையாக சரிவடைந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நம் நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில் இறக்குமதி 21.56 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த மாதத்தில் இறக்குமதி மதிப்பு 2,778 கோடி டாலராக இருந்துள்ளது. மார்ச் மாதத்தில் தங்கம் இறக்குமதி மட்டும் 80.48 சதவிகிதம் சரிந்து 97.29 கோடி டாலராக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் 498 கோடி டாலராக இருந்ததாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை வியாபாரிகள் கடையடைப்பு போராட்டமும் காரணமாக தங்கம் இறக்குமதி சரிவடைந்து இருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 5.47 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. இத்துடன் தொடர்ந்து 16வது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

படம்: ம.நவீன் (மாணவப்பத்திரிக்கையாளர்)

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ