Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இபிஎஃப்-ல் மாற்றம்: தொழிலாளர்கள் போராட்டம்.. போலீஸ் துப்பாக்கிச் சூடு.. பெங்களூரில் பதட்டம்!

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து பல்வேறு ஆயத்த ஆடை நிறுவனங்களைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெங்களூரில் இரண்டாவது நாளாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய மாற்றத்தின்படி தொழிலாளர்கள் தங்கள் வைப்பு நிதியை 58 வயதிற்குப் பிறகே பெற்றுக்கொள்ள முடியும். இந்த மாற்றத்தை கைவிடக்கோரி பெங்களூர்-ஓசூர் சாலையில் உள்ள பொம்மனஹள்ளி ஜங்க்சனில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் குவிக்கப்பட்டனர்.
ஒரு கட்டத்தில் கூட்டத்தினரை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீச வன்முறை வெடித்தது. மூன்று பேருந்துகள் கல் வீசித் தாக்கப்பட்டுள்ளன, மூன்று பேருந்துகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன. போலிஸார் வாகனம் கற்கள் வீசித்தாக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டதால் பெங்களூரு முழுவதும் பதட்ட நிலை நிலவுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ