Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐபிஓ மூலம் ரூபாய் 30,000 கோடி; எர்னஸ்ட் அண்ட் யங் கணிப்பு


நடப்பு ஆண்டில் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 30,000 கோடி ரூபாய் திரட்டப்படும் என்று எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் கணித்துள்ளது.

குயீக் ஹீல் டெக்னாலஜீஸ், டீம்லீஸ் சர்வீசஸ், பாரத் வயர் ரோப்ஸ், ஹெல்த்கேர் குளோபல் என்டர் பிரைசஸ், இன்பி பீம், பிரிசிசன் கேம்ஷாப்ட்ஸ் மற்றும் எக்விடாஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் என கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 7 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டிருக்கின்றன.

இது தவிர 15,000 கோடி ரூபாய் அளவுக்கு ஐபிஒ வெளியிட நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பொதுப்பங்கு வெளியீடு மூலம் 30,000 கோடி ரூபாய் திரட்டப்படும் என்று எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனம் கணித்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ