Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்: 7 இந்தியர்கள் உள்ளே.. மோடி வெளியே!

உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் ஏழு இந்தியர்கள் உள்ளனர். ஆனால், இந்த பட்டியலில் பிரதமர் மோடி இடம்பெறவில்லை.

உலகின் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் பரிசீலனை செய்யப்பட்டார். ஆனால் முதல் 100 இடங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த வருடம் இந்த பட்டியலில் மோடி இருந்தார்.

ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனத்தின் சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகியோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ