Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் பணிபுரிய சிறந்த நிறுவனம் கூகுள்தாங்க! ஏன் தெரியுமா?

இந்தியாவில் பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் கூகுள் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.

ராண்ஸ்டட் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இந்திய நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கூகுள் இந்தியா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது.

சம்பளம் மற்றும் பணியாளர் பலன், நீண்ட கால வேலை பாதுகாப்பு, நிறுவனத்தின் நிதி நிலைமை உட்பட பல்வேறு வழிகளில் பணிபுரிவதற்கு சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் கூகுள் நிறுவனம் சிறப்பான முறையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பணிபுரிவதற்கான சிறந்த ஐ.டி நிறுவனத்திற்கான விருதை டெல் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் சாம்சங் நிறுவனமும், இ-காமர்ஸ் நிறுவனங்களில் அமேசான் நிறுவனம் விருதுகளைப் பெற்றுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ