Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் 67,000 மெட்ரிக் டன் மின்னணு கழிவு! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னையில் ஆண்டுக்கு 67,000 மெட்ரிக் டன் மின்னணு கழிவுகள் உருவாவததாக அசோசெம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

இந்தியாவில் மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 1,20,000 மெட்ரிக் டன் கழிவு மும்பையில் உருவாகிறது. இதற்கு அடுத்ததாக டெல்லி மற்றும் பெங்களூரு நகரங்கள் உள்ளன. இந்த பட்டியலில் சென்னை 67,000 மெட்ரிக் டன் கழிவுகளை உருவாக்குவதாக கூறியுள்ளது.

மோசமான உள்கட்டமைப்பு, சட்டம் மற்றும் முறையான கட்டமைப்புகள் இல்லாத காரணங்களால் இந்தியாவில் 2.5 சதவிகித மின்னணு கழிவுகள் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகின்றன. மின்னணு கழிவுகள் வளர்ச்சி ஆண்டுக்கு 25 சதவிகிதமாக இருக்கும் என்றும், 2018-ம் ஆண்டுக்குள் 30 லட்சம் டன் என்கிற அளவைத் தொடும் என்றும் அசோசெம் ஆய்வில் கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ