Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தை வீக்.. வங்கிப்பங்குகள் இன்றும் விலையேற்றம்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (22.04.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த 6 நாட்களாக தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று இறக்கத்தில் நிறைவடைந்துள்ளது. பங்குச்சந்தை வர்த்தகத்தில் வாரத்தின் இறுதி நாளான இன்று காலை முதலே சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் உள்ளதால் இந்திய சந்தைகளும் மந்த நிலையில் காணப்படுகின்றன.  எனினும் எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஆக்சிஸ் வங்கி  முன்னணி வங்கிப்பங்குகள் இன்றும் விலையேற்றத்துடன் காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 42.24 சரிந்து 25838.14 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 12.75 புள்ளிகள் சரிந்து உயர்ந்து 7,899.30 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

மாருதி சுசூகி 3,816.05 2.99%
எஸ்பிஐ 200.15 2.98%
பேங்க் ஆப் பரோடா 161.95 2.66%
என்டிபிசி 143.65 1.77%
ஆக்சிஸ் வங்கி 475.85 1.69%

விலை குறைந்த பங்குகள்

ஹெச்யூஎல் 884.20 -2.20
ஏஷியன் பெயின்ட்ஸ் 871.55 -1.98
ஹெச்டிஎப்சி 1,131.90 -1.58
கோடக் மகேந்திரா 676.10 -1.54
சன் பார்மா 820.20 -1.52

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ