Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டிரேடிங் ரிப்போர்ட் - அக்ரி கமாடிட்டி!

அக்ரி கமாடிட்டி

ஏலக்காய் :
 
கடந்த வாரத்தில் ஸ்பாட் சந்தையில் ஏலக்காயின் வரத்து கூடிக் கொண்டிருக்கும் சமயத்திலும், ஏலக்காய் ஃப்யூச்சர்ஸ் பல வர்த்தகர்களால் நிலையான வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு, விலை ஏற்றத்தை நோக்கியே வர்த்தகமானது.
அதோடு புதிய ஏற்றுமதிக்காக ஆர்டர்கள் கிடைக்கும் என்கிற காரணத்தாலும், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் வறட்சியான வானிலை நிலவுவதாலும் இந்த விலை ஏற்றம் நிகழ்ந்ததாக அனலிஸ்டுகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 
ஒரு கிலோ ஏலக்காய்க்கான மே மாத ஃப்யூச்சர் ரூ. 774.20க்கு வர்த்தகமானது. அதோடு ஜூன் மற்ரும் ஜூலை மாத கான்டிராக்ட்கள் கூட முறையே 0.60 சதவிகிதமும், 1.06 சதவிகிதமும் அதிகரித்து வர்த்தகமானது என்பது கவனிக்கத் தக்கது.
தற்போது புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் வர வாய்ப்பிருப்பதாலும், ஏலாக்காய் ஃப்யூச்சர்ஸின் விலை அதிகரித்து வருவதாலும், அடுத்த வாரத்திலும் ஏலக்காய் விலை உயர்ந்து வர்த்தகமாகலாம்.
 
ஜீரகம்:
 
ஜீரகம் முக்கியச் சந்தைகளில் சற்று ஏற்றத்தில் வர்த்தகமானது. இதற்குச் சந்தைகளில் ஜீரகத்துக்கான தேவை அதிகரித்துள்ளதே காரணம். இதனால் ஜீரகத்தின் ஸ்பான் மற்றும் ஃப்யூச்சர் சந்தைகள் இரண்டுமே ஏற்றத்தில் இருந்தன. மே மாத ஃப்யூச்சர்ஸ் 1.4% அதிகரித்து குவிண்டால் ஜீரகம் ரூ.16585 க்கு வர்த்தகமானது.
முக்கியச் சந்தைகளில் தரமான ஜீரகம் இருப்பதால் ஜீரகத்துக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. வர்த்தகர்களும் இதனால் ஜீரகத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.
தரமான ஜீரக வரத்தும், வெளிநாட்டு தேவையும் ஜீரகச் சந்தைக்குச் சாதகமாக உள்ளதால் வரும் வாரத்திலும் ஜீரகம் விலை உயர்ந்து வர்த்தகமாகும். ஆனால் பெரும்பாலான வர்த்தகர்கள் தங்களின் லாபத்தை புக் செய்தால் விலை உயர்வு ஒரு வரம்புக்குள்தான் இருக்கும்.
 
மஞ்சள்:
 
 
சென்ற வாரத்தில் மஞ்சளுக்கான மே மாத ஃப்யூச்சர்ஸ் குவின்டால் ஒன்றுக்கு ரூ 8452 என்கிற விலையின் வர்த்தகமானது. அதே போல் ஜூன் மாத கான்டிராக்ட் 0.14 சதவிகிதம் விலை அதிகரித்து வர்த்தகமானது, ஜூலை மாத 0.12 சதவிகித விலை குறைந்து வர்த்தகமானது.
ஈரோடு சந்தையில் மஞ்சளின் வரத்து சுமாராக 1000 பைகள் குறைந்திருக்கிறது. அதே போல் நிஜாமாபாத் சந்தையிலும் மஞ்சளின் வரத்து குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அடுத்த வாரத்திலும் மஞ்சள் பக்கவாட்டிலேயே வர்த்தகமாக வாய்ப்பிருக்கிறது.
 
கொத்துமல்லி:
 
கொத்துமல்லி கடந்த வாரத்தில் அதிக ஏற்றத்தில் வர்த்தகமானது. ஆனால் வியாழன் அன்று வர்த்தகர்கள் விலை உயர்வில் தங்களின் லாபத்தை புக் செய்ததால் மீண்டும் விலை குறைந்தது. மே மாத கான்ட்ராக்ட் இதனால் 0.9% இறங்கி வர்த்தகமானது. கோடா சந்தையில் அதிகபட்சமாக குவிண்டால் கொத்துமல்லி ரூ. 7100க்கும் வர்த்தகமானது. வரும் வாரத்தில் கொத்துமல்லி ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகும்.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ