Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அட கடவுளே! ரகுராம் ராஜனைவிட அதிக சம்பளம் வாங்கும் அண்ணாமலை அரப்புலி கவுண்டர், வி.கந்தசாமி!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னரான ரகுராம் ராஜனை விடவும், ஆர்பிஐ-யில் அதிக சம்பளம் பெறும் 3 அதிகாரிகள் உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

தகவலுரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கி ஜூன் - ஜூலை 2015 சம்பள விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கோபாலகிருஷ்ண சீதாராம் ஹெக்டே (ரூ.4 லட்சம்), அண்ணாமலை அரப்புலி கவுண்டர் (ரூ.2,20,355) மற்றும் வி.கந்தசாமி (ரூ.2.1 லட்சம்) ஆகியோர் கவர்னர் ரகுராம் ராஜனை விடவும் அதிக மாதாந்திர வருவாய் ஈட்டியுள்ளதாக ஆர்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் மாதாந்திர மொத்த வருவாய் ரூ.1,98,700. இதில் அடிப்படை சம்பளம் ரூ.90,000, அகவிலைப்படி ரூ.1,01,700, ‘பிற’ என்ற வகையறாவில் ரூ.7,000 ஆகியவை உள்ளடங்கும். ஆர்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த விவரங்கள் ஜூன் - ஜூலை 2015க்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close