Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிஎஸ்என்எல்-ன் 50 ரூபாய்க்கு 20 ஜிபி டேட்டா; வதந்திகளை நம்பாதீர்கள்..!

பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக கடந்த வாரம் சமூகவலைதளங்களில்  தகவல் வெளியானது. இது இப்போது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்படி அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு 20 ஜிபி 3ஜி சேவையை 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக கடந்த வாரம் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.

தற்போது பிரபல நிறுவனங்கள் பல ஒரு ஜிபி 3ஜி டேட்டாவுக்கு ரூ.160 முதல் ரூ.250 வசூலிக்கும் நிலையில், அதைவிட 4ல் ஒரு பங்கு கட்டணத்தில் 20 மடங்கு கூடுதல் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்லுக்கு வாடிக்கையாளர்களை அதிகமாக இழுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இது வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து பிஎஸ்என்எல் வட்டாரங்களிடம் விசாரித்தபோது, 20 ஜிபி  3ஜி சேவையை 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெறும் வதந்தி என்பது  வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ