Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2020-ல் இ-காமர்ஸ் மார்க்கெட் விஸ்வரூபமெடுக்குமாம்!

இந்தியாவில் இ-காமர்ஸ் மார்க்கெட்டைப் பொறுத்தவரை 2020-ல் 102 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கும் என்று இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ) மதிப்பிட்டுள்ளது.


இந்தியாவில் இ-காமர்ஸ் மார்க்கெட் (பிஸினஸ் டூ கன்ஷ்யூமர்) 2015-ல் 16 பில்லியன் டாலராக உள்ளது. இது 2020-ல் 102 பில்லியன் டாலர் அதாவது 6,75,000 கோடியாக அதிகரித்து காணப்ப்படும் என்று சிஐஐ மதிப்பிட்டுள்ளது.  ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களைப் பொறுத்தவரை 2013-ல் 20 மில்லியனாக உள்ளது. இது 2020-ல் 220 மில்லியனாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ