Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்கா, ஜப்பான் நிதிக்கொள்கை தாக்கம்.. இறக்கத்தில் இந்திய சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (26.04.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் ரிஸர்வ் வங்கிகள் அடுத்தகட்ட நிதிக் கொள்கை குறித்து நடப்பு வாரத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன. இதன் தாக்கம், சர்வதேச நாடுகளின் பங்கு வியாபாரத்தில் எதிரொலித்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சற்று இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதுமட்டும் இல்லாமல் வரும் வியாழக்கிழமை டெரிவேடிவ் செக்மென்ட் எக்ஸ்பியரி ஆக இருப்பதாலும் சந்தை இறக்கத்தில் வர்த்தகமாகி வருவதாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 32.74 புள்ளிகள் குறைந்து  25,646.88 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.05 புள்ளிகள் குறைந்து  7851.00 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 101.95 3.61%
ஐடியா செல்லுலார் 120.90 2.33%
டாடா ஸ்டீல் 353.75 1.81%
இன்டஸ் இன்ட் வங்கி 999.85 1.78%
ஆரோபிந்தோ பார்மா 774.70 1.40%

விலை குறைந்த பங்குகள்

ஐசிஐசிஐ வங்கி 248.15 -1.90%
அதானி துறைமுகங்கள் 227.80 -1.73%
ஹெச்சிஎல் டெக் 835.10 -1.18%
பஜாஜ் ஆட்டோ 2,514.00 -1.17%
டெக் மஹிந்திரா 466.60 -1.14%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ