Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இங்கிலாந்தில் உள்ள மேன்ஷனில் விஜய் மல்லையா வசிக்கிறாராம்!

கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிக்கலில் தவித்து வரும் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் ஹெர்ட்போர்ஷையர் பகுதியில் உள்ள சொகுசான மேன்ஷனில் (விடுதி) வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடுதி பார்முலா 1 கார் பந்தய வீரர் லூவிஸ் ஹாமில்டனின் தந்தையிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.100 கோடி. வெளிநாட்டில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த விடுதி வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மல்லையாவுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் முடக்கியுள்ளது. இதனால் அவர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ