Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்டம் டூ டாப்: ஐரோப்பிய சந்தையால் இந்திய சந்தை படுஜோர்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (26.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்த நிலையில் இன்று 300 புள்ளிகள் அதிகரித்து ஏற்றத்தில் நிறைவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போதே இந்திய சந்தைகள் 130 புள்ளிகள் இறக்கத்தில் காணப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் ரிஸர்வ் வங்கிகள் அடுத்தகட்ட நிதிக் கொள்கை குறித்து நடப்பு வாரத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளன.

இதன் தாக்கம், சர்வதேச நாடுகளின் பங்கு வியாபாரத்தில் எதிரொலித்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சற்று இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன. அதுமட்டும் இல்லாமல் வரும் வியாழக்கிழமை டெரிவேடிவ் செக்மென்ட் எக்ஸ்பியரி ஆக இருப்பதாலும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தன.

இந்த நிலையில் கார்பரேட் நிறுவங்களின் வருவாய் அதிகரிப்பு மற்றும் சர்வதேச சந்தை போக்கு, குறிப்பாக ஐரோப்பிய சந்தை அதிக ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வந்த காரணத்தினால் இந்திய சந்தைகள் ஏற்றத்தில் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 328.37 புள்ளிகள் உயர்ந்து  26,007.30 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 107.60 புள்ளிகள் உயர்ந்து  7962.65 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 103.15 4.83%
ஐடியா செல்லுலார் 123.75 4.74%
இன்டஸ் இன்ட் வங்கி 1,021.40 3.98%
மாருதி சுசூகி 3,871.55 3.85%
யெஸ் பேங்க் 910.70 3.65%

விலை குறைந்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 229.10 -1.16%
பார்தி இன்ப்ராடெல் 363.05 -1.02%
ஹீரோ மோட்டோகார்ப் 2,931.85 -1.01%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,266.05 -0.31%
பிபிசிஎல் 975.80 -0.26%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ