Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் மந்த நிலையில் இந்திய சந்தை!


நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 4 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 26,000 புள்ளிகளைத் தாண்டி வர்த்தகமாகி நிறைவடைந்தது.

சாதகமான சர்வதேச நிலவரங்களால் நேற்றைய இந்திய பங்குச்சந்தை அதிகரித்து காணப்பட்டது. பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவிலிருந்து மீண்டது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வு போன்றவையும் பங்கு வர்த்தகத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின. இந்த நிலையில் இன்றைய (27.04.16) வர்த்தகம் சர்வதேச சந்தையால் மந்த நிலையில் பிளாட் ஆக வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 18.90 புள்ளிகள் சரிந்து  25,988.97 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 4.15 புள்ளிகள் குறைந்து  7958.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஓஎன்ஜிசி 222.00 3.59%
பார்தி Infratel 375.05 3.31%
பிபிசிஎல் 992.55 1.72%
டெக் மஹிந்திரா 482.55 1.48%
கோடக் மகேந்திரா 710.80 1.42%

விலை குறைந்த பங்குகள்

ஆக்சிஸ் வங்கி 468.70 -2.39%
ஐசிஐசிஐ வங்கி 250.10 -1.55%
அல்ட்ராடெக் சிமெண்ட் 3,218.15 -1.47%
லூபின் 1,557.05 -1.40%
ஹிண்டால்கோ 102.15 -0.97%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ