Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாக்லேட் போட்­டி: சமாளிக்க களத்தில் இறங்கியது அமுல்!


‘சாக்லேட்’ போட்­டியைச் சமா­ளிக்கும் வகையில் தனது, ‘சாக்லேட்’ தயா­ரிப்பை அதி­க­ரிக்க அமுல் நிறு­வனம் முடிவு செய்­துள்­ளது.

குஜராத் கூட்­டு­றவு பால் சந்­தைப்­ப­டுத்தும் கூட்­ட­மைப்பு, ‘அமுல்’ என்ற பெயரில் பால், பால் உப பொருட்கள் தயா­ரிப்பு மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்த அமுல் நிறுவனத்திற்கு குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்­டத்தில் சாக்லேட் தயா­ரிக்கும் ஆலை ஒன்று உள்­ளது. இங்கு, ஆண்­டுக்கு 7,600 டன் சாக்லேட் தயா­ரிக்க முடியும்.

இந்த நிலையில் அமுல் நிறு­வனம் தனது சாக்லேட் ஆலையின் திறனை 20 ஆயிரம் டன்­னாக அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. இந்த விரி­வாக்க பணிகள் 2016 – 17ம் ஆண்­டிற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமுல் நிறுவனத்தைப் பொறுத்தவரை சாக்லேட் விற்­ப­னையில் நான்­கா­வது இடத்தை பெற்­றுள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ