Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதல் முறையாக சரிவில் ஐபோன் விற்பனை! கலக்கத்தில் ஆப்பிள்


கடந்த மார்ச் மாத காலாண்டில் குறைந்தளவிலே ஐபோன் விற்பனையானதால் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சரிவடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாத காலாண்டு முடிவில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 50.56 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. 51.97 பில்லியன் டாலர் வருவாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதனுடைய தயாரிப்புகளில் ஐபோன்-களின் விற்பனை அதிகளவில் நடக்கிறது. இந்த நிலையில் கடந்த காலாண்டில் ஐபோன்-களின் விற்பனை சரிவால் ஆப்பிள் வருவாய் பாதிப்படைந்துள்ளது. கடந்த காலாண்டில் மட்டும் ஐபோன் விற்பனையில் 10 மில்லியன் யூனிட்கள் சரிவடைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் முதன் முறையாக ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் சரிவடைந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ