Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லஷ்மி விலாஸ் பேங்க் நிகர லாபம் 36.25% அதிகரிப்பு


மார்ச் 31 2016 உடன் முடிந்த காலாண்டில் லஷ்மி விலாஸ் பேங்க் நிகர லாபம் 36.25% அதிகரித்துள்ளது.

லஷ்மி விலாஸ் பேங்க்-ன் செயல்பாட்டு  லாபம் 10.51% உயர்வடைந்துள்ளது. வணிகம் 17.60% விரிவடைந்துள்ளது. நிகர வட்டி வருமானம் சாதனை அளவாக 22.53% அதிகரித்துள்ளது. சொத்து  மீதான வருமானம் மற்றும் பங்கு மூலதனம் மூலமான வருமானம் முறையை 0.70% மற்றும் 11.74% ஆக உள்ளது.



 

நிதி ஆண்டு

நிகர லாபம் 36.25% அதிகரித்து ரூ. 132.29 கோடியிலிருந்து  (2014-15) ரூ. 180.24 கோடியாக (2015-16) அதிகரித்துள்ளது.

செயல்பாட்டு  லாபம் 10.51% உயர்வு (ரூ.368.41 கோடியிலிருந்து ரூ. 407.12 கோடி).

நிகர வட்டி வருமானம் (என்ஐஐ) சாதனை அளவாக ரூ. 118.66 கோடி (22.53%) அதிகரித்து, ரு. 526.65 கோடியிலிருந்து ரூ. 645.31 கோடியாக உயர்ந்துள்ளது.

2016 மார்ச் 31 நிலவரப்படி, வங்கியின் நிகர வட்டி வரம்பு (என்ஐஎம்) 2.78% ஆக உள்ளது.

மொத்த வாராக் கடன் 2.75%லிருந்து 1.97% ஆகவும், நிகர வாராக் கடன் 1.85%லிருந்து 1.18% ஆகவும் குறைந்துள்ளது.

மொத்த டெபாசிட்கள் ரூ. 21,964.21 கோடியிலிருந்து ரூ. 25,430.96 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு கணக்கில் 15.78% வளர்ச்சியாகும்.

காசா (CASA) ரூ. 3,661.84 கோடியிலிருந்து ரூ. 4,415.51 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு கணக்கில் 20.58% வளர்ச்சியாகும்.

வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ. 16,512.84 கோடியிலிருந்து ரூ. 19,818.93 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு கணக்கில் 20.02% வளர்ச்சியாகும்.

வங்கியின் மொத்த வணிகம், ரூ. 45,249.89 கோடியாக அதிகரித்துள்ளது. இது ஆண்டு கணக்கில் 17.60% வளர்ச்சி.

நான்காம் காலாண்டு

நிகர லாபம் 22.46% அதிகரித்து ரூ. 40.07 கோடியிலிருந்து ரூ. 49.07 கோடியாக அதிகரித்துள்ளது.

மொத்த வருமானம் 14.29% அதிகரித்து ரூ. 663.97 கோடியிலிருந்து ரூ.758.84 கோடியாக அதிகரித்துள்ளது.

வங்கியின் வட்டி வருமானம் 16.71% அதிகரித்து ரூ.570.94 கோடியிலிருந்து ரூ.666.33 கோடியாக அதிகரித்துள்ளது.

பங்கு மூலதனம் மீதான வருமானம் நான்காம் காலாண்டில் 12.27%. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் 10.84% ஆக இருந்தது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ