Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"எப் அண்ட் ஓ" எக்ஸ்பியரி.. சென்செக்ஸ் பலத்த அடி!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (28.04.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தின்போது ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்த காரணத்தினால் இந்திய சந்தைகள் சற்று இறக்கத்தில் காணப்பட்டது.

எனினும் இன்று எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி என்பதால் இந்திய பங்குச்சந்தகள் இறக்க்கதில் வர்த்தகமாக தொடங்கின. புளுசிப் நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்வதன் எதிரொலி, ஜப்பான் மத்திய வங்கி முடிவு மற்றும் எப் அண்ட் ஓ எக்ஸ்பியரி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 461.02 புள்ளிகள் உயர்ந்து  25,603.10 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 132.65 புள்ளிகள் உயர்ந்து  78747.25 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

யெஸ் பேங்க் 945.55 3.28%
ஐடியா செல்லுலார் 126.50 1.20%
எய்கர் மோட்டார்ஸின் 20,292.95 0.89%
டிசிஎஸ் 2,527.75 0.66%
ஏசிசி 1,437.85 0.58%

விலை குறைந்த பங்குகள்

ஹிண்டால்கோ 96.90 -4.77%
ஹெச்சிஎல் டெக் 799.90 -4.50%
ஹெச்டிஎப்சி 1,085.55 -3.21%
ஐடிசி 322.90 -3.19%
M & 1,344.50 -2.91%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ